செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்டில் டு பிளிசிஸ் விளையாடுவாரா?

ஜிம்பாப்வேயிற்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் விளையாடுவது சந்தேகம் எனத் தெரியவந்துள்ளது.

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நடத்த தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஆர்வமாக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக ஜிம்பாப்வே அணிக்கெதிராக ‘பாக்கிங் டே’ என அழைக்கப்படும் டிசம்பர் 26-ந்தேதி பகல்-இரவு போட்டியாக நடத்த முடிவு செய்தது.

இதற்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் வருகிற 26-ந்தேதி நான்கு நாட்கள் கொண்ட பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நடக்க இருக்கிறது. முக்கியமான இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் களம் இறங்குவது கடினம் எனக்கூறப்படுகிறது.

சமீபத்தில் வங்காள தேச அணி தென்ஆப்பிரிக்கா சென்றிருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது டு பிளிசிஸ் முதுகு வழி காரணமாக அவதிப்பட்டார். இதனால் 6 வாரம் காலம் ஓய்வெடுக்க அறிவுரை வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT