செய்திகள்

ஆட்டம் கண்ட ஹெலிகாப்டர்: காயமின்றி உயிர்தப்பினார் மகாராஷ்டிரா முதல்-மந்திரி பட்நாவிஸ்

மகாராஷ்டிரா முதல்-மந்திரி செல்லவிருந்த ஹெலிகாப்டர் லேசான ஆட்டம் கண்டது. இதில் தேவேந்திர பட்நாவிஸ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்.

மாலை மலர்

மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸ் பயணம் மேற்கொள்ள இருந்த ஹெலிகாப்டர் திடீரென ஒரு விபத்தில் சிக்கியது. இதில் பட்நாவிஸ் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்.

ரைகாத்தில் இருந்து மும்பைக்கு திரும்ப தயாராயிருந்த பட்நாவிஸ், ஹெலிகாப்டரில் ஏற முயன்ற போது, திடீரென ஹெலிகாப்டர் புறப்படத் தொடங்கியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒரு பக்கமாக சாய்ந்தது. இதில் ஹெலிகாப்டரின் கதவு பக்கத்தில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்த பட்நாவிஸ், எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினார்.

இதுகுறித்து, முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்நாவிஸ் ஏறும் போது, புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒருபக்கமாக சரிந்தது என்றும் கூறியிருக்கிறது. இதையடுத்து அங்கு விரைந்த முதலமைச்சரின் பாதுகாப்புக்குட்ட அதிகாரிகள் பட்நாவிசை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சித் தலைவரான ஜெயந்த் பாட்டீல் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பட்நாவிஸ் நேற்று ரைகாத் சென்றிருந்தார். விழாவில் பங்கேற்றுவிட்டு மும்பை திரும்பிய போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.