செய்திகள்

அரூர் அருகே அரசுப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கெளாப்பறை, கீரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மாலை மலர்

காடையாம்பட்டி:

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கெளாப்பறை, கீரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.  

உலக பார்வை தினமான அக்டோபர் 12-ல் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கண் பாதுகாப்பு, கண் தானம்  குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டன.

கண் பாதுகாப்பு குறித்த வினா, விடை நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக, வட்டார மருத்துவர் ஆர்.தொல்காப்பியன் தலைமையில் மருத்துவர் குழுவினர் மாணவ, மாணவியர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில், தலைமை ஆசிரியர்கள் ஆர்.அண்ணாதுரை, ஜெகநாதன், கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.