செய்திகள்

பக்ரைன் பிரதமரை சந்தித்தார் சுஷ்மா - புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

2 நாள் அரசு முறை பயணமாக பக்ரைன் சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு பிரதமர் கலீபா பின் சல்மான் அல் கலிபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Bahrain #SushmaSwaraj

இரு நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று பக்ரைன் சென்றடைந்தார். அப்போது, அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி சேக் காலித் பின் அகமது பின் முகமது அல் கலிஃபா மனாமா விமான நிலையத்தில் அரசு மரியாதையுடன் அவரை வரவேற்றார்.

இதையடுத்து நேற்று மாலை, பக்ரைனில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக கட்டிடத்தை சுஷ்மா சுவராஜ் திறந்து வைத்தார்.