எம்ஜிஆர் சென்டிரல் ரெயில் நிலையம் 
செய்திகள்

சென்டிரலில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கீழ்க்கண்ட 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மேட்டுப்பாளையம் (வண்டி எண்: 12671) இடையே இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஜூன் மாதம் 11-ந்தேதியில் இருந்து இரவு 8.55 மணிக்கு பதிலாக இரவு 9.05 மணிக்கு புறப்படும்.

* எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஆலப்புழா(22639) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஜூன் மாதம் 11-ந் தேதியில் இருந்து இரவு 9.05 மணிக்கு பதிலாக இரவு 8.55 மணிக்கு புறப்படும்.

* திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர். சென்டிரல்(12698) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஜூன் மாதம் 13-ந் தேதியில் இருந்து இரவு 8.20 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.