விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள குந்தலப்பட்டியில் முருகேஸ்வரி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு அறையில் திடீரென பட்டாசுகள் பயங்கரமாக வெடித்தது. இதில் அறைகள் தரைமட்டமானது. அந்த அறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த செங்குன்றாபுரத்தை சேர்ந்த குமரன் (54) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.