செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 தொழிலாளிகள் படுகாயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அதே பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இதில் சுற்றுவட்டார பகுதி யை சேர்ந்த பெண்கள் உள் பட ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர்.

ஊழியர்கள் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். ஆலை யின் ஒரு இடத்தில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடித்து சோதனை செய்யப்பட்டது.

அப்போது தீப்பொறி அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகளில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த ஏசுதாஸ் (வயது 24), பல்லப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த செல்வம் (25) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.