செய்திகள்

முன்னாள் விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவி இலங்கை வடக்கு மாகாண மந்திரியாக நியமனம்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த சசிதரனின் மனைவி, ஆனந்தி சசிதரன் வடக்கு மாகாண அரசின் மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

கொழும்பு:

இலங்கையில் செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பில் அரசியல் பிரிவின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர் வேலாயுதம் சசிதரன் என்ற எழிலன். உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் சசிதரன் காணாமல் போனார். அவரது நிலை என்ன என்பது இன்று வரை புதிராகவே உள்ளது. அவரை கண்டுபிடித்து தரக்கோரி சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் வரை மனு

அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சசிதரனின் மனைவி ஆனந்தி இலங்கை வடக்கு மாகாண அரசில் புரணமைப்பு மற்றும் மகளிர் விவகாரத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட மந்திரி சபையில் ஆனந்தியை மந்திரியாக நியமித்து முதல்வர் விக்னேஷ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தன்னுடைய கணவர் காணாமல் போனது குறித்து நீதியை எதிர்நோக்கியுள்ளதாக ஆனந்தி தெரிவித்துள்ளார்.