ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினர் 
செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் சோபூரில் பயங்கரவாதிகள் ஊடுருவல்- ராணுவம் தேடுதல் வேட்டை

ஜம்மு காஷ்மீரின் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்த பகுதியில் ராணுவம் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை அங்கு விரைந்தனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த கந்த் பிராத் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை முன்னேற விடாமல் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்குமிடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.