பள்ளிக் கல்வித்துறை வளாகம் 
செய்திகள்

10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை:

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ல் வெளியாகிறது. இதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26-ம் தேதி முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியாகிறது. 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17-ல் தொடங்கி ஏப்ரல் 9-ல் முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.