ஐதராபாத்:
தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் எம்.பி. நம நாகேஸ்வர ராவ். இவர் 2009-ம் ஆண்டு கம்மன் என்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். அத்துடன் அக்கட்சியின் பாராளுமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 2014-ம் ஆண்டு தோல்வியடைந்தார்.
இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் தொடர்பு இருந்துள்ளது. தற்போது அவர்களுக்கிடையில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. தற்போது அந்த பெண்ணுடன் இருந்துள்ள படத்தை வெளியிடுவதாக நாகேஸ்வர ராவ் மிரட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் அந்த பெண், நாம நாகேஸ்வர ராவ் மீது தன்னை மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் போலீசார் நாகேஸ்வர ராவ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.