ஈவெரா பெரியார் சாலை பெயர் மாற்றம் 
செய்திகள்

பெரியார் நெடுஞ்சாலை பெயரை மாற்ற ‘காபந்து’ அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?: மு.க. ஸ்டாலின் கண்டனம்

ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பாரிஸ் முனையில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை எனப் பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அந்த சாலைக்கு Grand Western Trunk Road எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முக ஸ்டாலின், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?

எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா?

உடனடியாக மாற்றிடுக!

தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்!’’ எனப் பதிவிட்டுள்ளார்.