எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்-8’ விமானம், நேற்று காலை கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக அதிகாரிகள் உயர்மட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் மீதான பாதுகாப்பு அச்சம் எழுந்தது. எனவே, ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கும்படி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டது. அதன்படி விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.