கோப்புப்படம் 
செய்திகள்

தமிழகத்தில் 7-ந் தேதி மதுக்கடைகளை திறக்க கூடாது- கொ.ம.தே.க வலியுறுத்தல்

மே 7-ந்தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற உத்தரவை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சூழ்நிலையில் மதுபானக்கடைகள் திறந்தால் ஏழை குடும்பங்களில் சிறிதளவு மீதி இருக்கின்ற பணமும் டாஸ்மாக் கடைகளில் செலவழிக்கப்படும். இதனால் பல குடும்பங்களில் அடிப்படை தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் போகும். கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாத இந்த சூழ்நிலையில் அதிகபட்சம் மக்கள் இன்னும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் குடும்ப சண்டை, சச்சரவுகள் அதிகமாகும்.

மதுபானங்கள் வாங்குவதற்காக மக்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதை காரணம் காட்டி அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவெடுத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மே 7-ந்தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற உத்தரவை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT