செய்திகள்

எரியோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தாய் கண் முன் மகன் பலி

எரியோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் தாய் கண் முன் மகன் பலியானார்.

மாலை மலர்

எரியோடு:

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள தூக்கனாம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 21). இவருக்கு சொந்தமான தோட்டம் கொம்பேறிப்பட்டியில் உள்ளது.

இந்த தோட்டத்துக்கு தினேஷ்குமார் தனது தாயார் தனலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மாலை நேரம் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். ஒத்தப்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக தோப்பூரை சேர்ந்த சின்ராஜ் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே தினேஷ்குமார் இறந்து போனார்.மற்ற 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தனலலட்சுமி நிலைமை மோசமானதால் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.