செய்திகள்

இரணியல் அருகே கட்டிட தொழிலாளிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

இரணியல் அருகே முன்விரோத தகராறில் கட்டிட தொழிலாளிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இரணியல்:

இரணியல் அருகே ஆத்திவிளை பகுதியை சேர்ந்தவர் உபைது உல்லாஸ் (வயது 50). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவதாஸ் என்பவருக்கும்  கட்டிட வேலை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் உபைது உல்லாசை சிவதாஸ் மற்றும் அவரது உறவினர் ஜுலியஸ் ஆகியோர் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.

இதில் காயம் அடைந்த உபைது உல்லாஸ் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜீத்குமார் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பேபிதங்கம் விசாரணை நடத்தி சிவதாசை கைது செய்தார். தலைமறைவாக உள்ள ஜுலியசை போலீசார் தேடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT