புதுடெல்லி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எப்.) வட்டி விகிதத்தை மத்திய அறங்காவலர் வாரியம் (சிபிடி) தீர்மானிக்கிறது. அவ்வகையில் வருங்கால வைப்பு நிதிக்கு இந்த நிதியாண்டில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை மாற்றியமைப்பது குறித்து அறங்காவலர் வாரியம் இன்று ஆலோசனை நடத்தியது.
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பி.எப். கணக்குதாரர்களின் ஆண்டு வட்டியை 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த வட்டி விகித மாற்றத்திற்கு நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியதும் நடைமுறைக்கு வரும். வட்டி குறைப்பால் பிஎப் கணக்கு வைத்துள்ள 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
2016-17 நிதியாண்டில் பி.எப். நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்கியது. அதன்பின்னர் 2017-18ம் நிதியாண்டில் 8.55 சதவீதமும், 2018-29ல் 8.65 சதவீதமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.