செய்திகள்

பாபர் ஆசம் சதம் வீண்: ஜேசன் ராய் வாணவேடிக்கையால் 341 இலக்கை எட்டி இங்கிலாந்து அசத்தல் வெற்றி

ஜேசன் ராய் 89 பந்தில் 114 ரன்கள் விளாச பாகிஸ்தானுக்கு எதிராக 341 ரன்களை சேஸிங் செய்து அசத்தல் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

மாலை மலர்

பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 63-வது போட்டியில் ஆடும் அவருக்கு இது 9-வது செஞ்சூரியாகும். பாபர் ஆசம் 112 பந்தில் 115 ரன்னும் (13 பவுண்டரி, 1 சிக்சர்), முகமது ஹபீஸ் 59 ரன்னும், பகர் ஜமான் 57 ரன்னும் எடுத்தனர். டாம் குர்ரான் 4 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இங்கிலாந்து 49.3 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 341 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்று சாதித்தது.

தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 8-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 89 பந்தில் 114 ரன்னும் (11 பவுண்டரி, 4 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 64 பந்தில் 71 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முகமது ஹஸ்னைன், இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டும் ஜுனைத்கான், ஹசன் அலி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இங்கிலாந்தின் வெற்றியில் பாபர் ஆசமின் சதம் பலன் இல்லாமல் போனது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.