செய்திகள்

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND #ViratKohli #Rahane

மாலை மலர்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலையில் லேசாக மழை பெய்ததால் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. ரிஷப் பந்த், அஸ்வின் களம் இறங்கினார்கள்.

92-வது ஓவரை பிராட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பந்த் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பிராட் வீசிய 94-வது ஓவரில் அஸ்வின் ஸ்டம்பை பறிகொடுத்தார். அஸ்வின் 17 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார்.