செய்திகள்

பேட்டிங், பந்து வீச்சு இல்லை, கேட்ச் இல்லை- ஆனால் வெற்றியை கொண்டாடிய அடில் ரஷித்

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் இரண்டு இன்னிங்சிலும் பந்து வீசவில்லை, பேட்டிங் செய்யவில்லை, கேட்ச் பிடிக்கவில்லை. #ENGvIND

மாலை மலர்

மேலும் இந்திய வீரர்கள் க்ளீன் போல்டு, எல்பிடபிள்யூ மற்றும் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானதால் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போனது. அதன்பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் பேட்டிங் பிடிக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போனது.

பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதிலும் மேற்கொண்ட அந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசி இந்தியாவை 130 ரன்னில் சுருட்டினார்கள். இதனால் அடில் ரஷித்திற்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் கேட்ச் ஏதும் பிடிக்கவில்லை.