செய்திகள்

நம்பர் ஒன் என்பதைவிட இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றுவதே முக்கியம்- மோர்கன்

ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் நீடிப்பதைவிட, இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்வதே முக்கியமானது என மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND

மாலை மலர்

இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து தொடரை 1-2 என இழந்தால் கூட மாற்றம் ஏதும் வராது.

இருந்தாலும் தரவரிசையை விட இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவதே முக்கியமானது என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘இந்தியா மிகவும் வலுவான அணி. முதல் போட்டியில் அவர்களது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இதனால் தொடரில் அவர்களை வீழ்த்தினால் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கும். குறிப்பாக நம்பிக்கை அதிகரிக்க முக்கியமானதாக இருக்கும்.

2-வது போட்டியில் பெற்ற வெற்றியை எல்லா போட்டிக்கும் எடுத்துச் சென்றால் சிறந்ததாக இருக்கும். அதேபோல் ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகமிக முக்கியமானது.