செய்திகள்

2-வது ஒருநாள் கிரிக்கெட்- இந்தியாவிற்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

லார்ட்ஸில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. #ENGvIND #JoeRoot

மாலை மலர்

முதல் 10 ஓவரில் 69 ரன்கள் சேர்த்திருந்தது. 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார். அடுத்து பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தின் ரன்வேட்டைக்கு தடைபோட்டார் குல்தீப் யாதவ்.

3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். ரூட் நிதானமாக விளையாட மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும், 51 பந்தில் 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 30.3 ஓவரில் 189 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (4), மொயீன் அலி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

7-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் டேவிட் வில்லே ஜோடி சேர்ந்தார். அப்போது இங்கிலாந்து 41.4 ஓவரில் 239 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 96 பந்தில் 82 ரன்கள் எடுத்திருந்தார்.


31 பந்தில் 51 ரன்கள் சேர்த்த டேவிட் வில்லே

டேவிட் வில்லே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 46-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் டேவிட் வில்லே இரண்டு பவுண்டரியுடன் ஒரு சிக்ஸ் விளாசினார். 47-வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். பாண்டியா வீசிய 48-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் அடித்து லார்ட்ஸ் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார். ஜோ ரூட். 109 பந்தில் சதம் அடித்த ஜோ ரூட்டிற்கு இது சர்வதேச அளவில் 12-வது சதமாகும்.