பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.