செய்திகள்

பயிற்சி ஆட்டம்- ஆஸ்திரேலியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் ஜொலிக்காத மேக்ஸ்வெல்

இங்கிலாந்து தொடருக்கான 2-வது பயிற்சி ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. #ENGvAUS

மாலை மலர்

இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. சசக்ஸ் அணிக்கெதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டாய்னிஸின சதத்தால் ஆஸ்திரேலியா 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது பயிற்சி ஆட்டத்தில் மிடில்செக்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட்டின் (106) அபார சதத்தால் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. ஷேன் மார்ஷ் 49 ரன்னும், ஆரோன் பிஞ்ச் 54 ரன்களும் சேர்த்தனர். அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 6 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். முதல் போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

ஸ்மித், வார்னர் இல்லாததால் மேக்ஸ்வெல் அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று எதிர்பார்த்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடாதது அந்த அணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.