செய்திகள்

இந்தியா ஏ அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து லயன்ஸ் அணி ரன் குவிப்பு

இந்தியா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. #IndA #EnglandLions

இந்தியா ஏ அணி இங்கிலாந்தில் பயணம் செய்து விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்து ஏ அணியுடன் ஒரு நான்கு நாள் டெஸ்டில் மோதுகிறது.

நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஏ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் , அலெஸ்டர் குக் ஆகியோர் இறங்கினர்.

ரோரி பர்ஸ்ன்ஸ் 5 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிக் கபின்ஸ் குக்குக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். கபின்ஸ் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  

அவரை தொடர்ந்து இறங்கிய டேவிட் மலன் இறுதி வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ்டர் குக் சதமடித்து அசத்தினார்.

இறுதியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து ஏ அணி 88 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. அலெஸ்டர் குக் 154 ரன்களுடனும், டேவிட் மலன் 59 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். #IndA #EnglandLions