சமீபத்தில் முடிவடைந்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 0-4 என இழந்தது. இதனால் பெய்லிஸ் மீது கடும் விமர்சனம் கிளம்பியது. இந்நிலையில் தனது பதவிக் காலத்தை நீட்டிக்க மாட்டேன் என்று பெய்லிஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பெய்லிஸ் கூறுகையில் ‘‘என்னுடைய ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அதன்பிறகு நான் வெளியேறுவேன். நான்கு வருடத்திற்குப் பிறகு மாற்றத்திற்கான நேரம் என்று நான் நினைக்கிறேன். புதிய பயிற்சியாளர் மற்றும் மாறுபட்ட அணுகுமுறை புதிய உத்வேகத்தை கொடுக்கும்’’ என்றார்.