செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்- சாஹர் பந்து வீச்சு, அகர்வால் சதத்தால் இந்தியா ஏ வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் சாஹர் ஐந்து விக்கெட்டும், அகர்வால் சதம் அடிக்கவும் இந்தியா ‘ஏ’ அணி எளிதில் வெற்றி பெற்றது. #INDA

மாலை மலர்

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 10 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ 49.1 ஓவரில் 221 ரன்னில் ஆல்அவுட் ஆனது.