நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த 48 வயது நபர் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 28-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து உள்ளது.