செய்திகள்

என்ஜின் கோளாறு: நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் - பயணிகள் அவதி

திருப்பூர் அருகே என்ஜின் கோளாறு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் தவித்தனர்.

திருப்பூர்:

திருப்பதியில் இருந்து கோவைக்கு தினமும் திருப்பதி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று கோவைக்கு வந்து கொண்டிருந்தது. இரவு 9.45 மணியளவில் திருப்பூர் அருகே விஜயமங்கலம் என்ற இடத்தில் வந்தது. அப்போது திடீரென ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் நடுவழியில் நின்றது.இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் என்ஜின் கோளாறை சரி செய்ய முடியவில்லை.

இதனை தொடர்ந்த போத்தனூரில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு 3 மணி நேரம் தாமதமாக கோவை புறப்பட்டு சென்றது.

இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் நடு வழியில் நின்றதால் அந்த வழியாக செல்ல வேண்டிய டிகார்டன், திருவனந்தபுரம், கொச்சி வேலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ற பின்னரே அவைகள் புறப்பட்டு சென்றது.

SCROLL FOR NEXT