செய்திகள்

எழும்பூரில் ரெயின் என்ஜின் தடம் புரண்டது: போக்குவரத்து பாதிப்பு

எழும்பூரில் ரெயின் என்ஜின் தடம் புரண்டதால் வெளியூரில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வர வேண்டிய 2 ரெயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.

சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களை பராமரிப்பு நிலையத்துக்கு இழுத்துச் செல்ல தனியாக என்ஜின்கள் உள்ளன.இன்று காலை 8.30 மணியளவில் 1-வது பிளாட் பாரத்தில் இருந்து அந்த என்ஜின் புறப்பட்டது.

சிறிது தூரம் சென்றதும் திடீரென்று தடம் புரண்டது. உடனே டிரைவர் என்ஜினை நிறுத்தினார். இதனால் கவிழாமல் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றது.

உடனே ரெயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெளியூரில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வர வேண்டிய 2 ரெயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.