கோப்பு படம். 
செய்திகள்

வள்ளியூர் அருகே நிச்சயதார்த்தம் நின்றதால் வாலிபர் தற்கொலை

வள்ளியூர் அருகே நிச்சயதார்த்தம் நின்றதால் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரை சேர்ந்தவர் ஜோசப் சிங்கராஜா (வயது 26). இவர் அப்பகுதியில் இருசக்கர பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து பெண் பார்த்தனர்.

இதைத்தொடர்ந்து 2 நாட்களில் நிச்சயம் செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில் ஜோசப் சிங்கராஜை பற்றி சிலர் பெண் வீட்டில் தவறாக கூறியதாக தெரிகிறது. இதனால் பெண் வீட்டார் நிச்சய தார்த்தத்தை நிறுத்திவிட்டனர். இதில் மனமுடைந்த ஜோசப் சிங்கராஜ் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.