செய்திகள்

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா மாவட்டத்தில் உள்ள யுனிசோ என்ற இடத்தில் நேற்றிரவு பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை குறிவைத்து சரமாரியாக தாக்கினர். சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு தீவிரவாதி குண்டடி பட்டு காயங்களுடன் சிக்கியதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அப்பகுதியில் விடிய, விடிய சோதனை நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.