ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் உள்ள தாய்ல்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய
தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இன்று காலை தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு
தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இரு தரப்பினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் சிக்கி அப்பகுதி பெண் ஒருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சண்டை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நிலமையை கட்டுக்குள் வைக்க கூடுதலாக பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.