செய்திகள்

காஷ்மீர்: அமர்நாத் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சம்பூரா செக்டார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே சிலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும்,

அவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், அங்கு அதே இயக்கத்தைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும், சண்டை நீடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.