செய்திகள்

சென்னை விமானநிலையத்தில் லிப்டுக்குள் சிக்கித்தவித்த தமிழக முதல்வர்

சென்னை விமானநிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற லிப்ட் பழுதடைந்தால் அவர் சுமார் 8 நிமிடங்கள் லிப்டிற்குள் சிக்கிக்கொண்டார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு தரைதளத்திலிருந்து முதல்தளத்திற்கு செல்வதற்கு லிப்டை பயன்படுத்தினார். அப்போது அவருடன் சில முக்கிய அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இந்நிலையில், மேலே புறப்பட்ட லிப்ட் பாதிவழியில் கோளாறு காரணமாக நின்றது. உடனடியாக லிப்டை சரிசெய்ய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு விரைந்த பணியாளர்கள் கோளாரை சரிசெய்தனர். அதன்பின் லிப்ட் வேலை செய்ய தொடங்கியது.

அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்ற அரசு அதிகாரிகள் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் சுமார் எட்டு நிமிடங்கள் லிப்டுக்குள் சிக்கிக்கொண்டனர் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.