கோவை:
கோவை மின்பகிர்மான பொறியாளர் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை பெரியநாயக்கன்பாளையம், பி.ஜி.புதூர் பிரிவு பகுதிகளில் சிலர் பட்டம் விட்டு விளையாடுகிறார்கள். அவர்கள் விடும் பட்டம் உயரழுத்த மின்பாதையில் சிக்கியதால் கடந்த 27 மற்றும் 30-ந்தேதிகளில் மின் தடை ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரி, குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடைபட்டது. மின் தடை மற்றும் மின் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.