செய்திகள்

கண்ணமங்கலத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி

கண்ணமங்கலம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின்வயர் அறுந்து விழுந்ததை பெண் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

மாலை மலர்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மின்வயர் ஒன்று அறுந்து விழுந்தது.

அந்த வயர் அறுந்த நிலையில் ரோட்டில் கிடந்தது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற ராணி, தேசிகாமணி, அஞ்சலி, ஞானவேல், பிரியா, குணசேகரன் ஆகியோர் அறுந்து கிடந்த வயரில் மின்சாரம் பாய்ந்ததை அறியாமல் அதனை மிதித்தனர்.

அப்போது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ராணி வழியிலேயே இறந்து விட்டார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.