செய்திகள்

அய்யங்குட்டிபாளையத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

வீட்டின் மாடியில் மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் பெயிண்டர் உடல் உரசியதில் மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை கரையாம்புத்தூர் சின்ன காலனியை சேர்ந்தவர் சுபாஷ்சந்தர் (வயது 42). பெயிண்டர். நேற்று இவர் அய்யங்குட்டி பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது வீட்டின் மாடியில் மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் எதிர்பாராதவிதமாக சுபாஷ்சந்தர் உடல் உரசியதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்த சுபாஷ்சந்தரை உடன் வேலை செய்த தொழிலாளர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபாஷ்சந்தர் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி பலியான சுபாஷ்சந்தருக்கு குணா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews