டெல்லி மேல்-சபையில், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் நிர்வாகிகள் அகமது பட்டேல், சாந்தாராம் நாயக் உள்பட 10 எம்.பி.க்களின் பதவிக்காலம், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் முடிவடைகிறது. எனவே, மேற்கண்ட 10 காலியிடங்களை நிரப்ப ஜூன் 8-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 16-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில், இந்த தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. புதிய தேர்தல் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறியது.
ஜனாதிபதி தேர்தல் பணிகள் குறுக்கிடுவதாலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நிகழ்த்த அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட வாய்ப்பு ஜூன் 3-ந் தேதி தொடங்குவதாலும் டெல்லி மேல்-சபை தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் கமிஷன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.