செய்திகள்

தென் சென்னையில் 3 மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை வெளியிடாத தேர்தல் ஆணையம்

தென்சென்னையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 மணி நேரமாகியும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மாலை மலர்

பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.