செய்திகள்

5 மாநில தேர்தல் முடிவுகள்: பா.ஜனதாவின் எதிர்மறை அரசியலையும் மீறி கிடைத்த வெற்றி - சோனியாகாந்தி மகிழ்ச்சி

பாரதிய ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். #BJP #Congress #ElectionResult2018 #SoniaGandhi

மாலை மலர்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங் கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவளிக்க முன் வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.

இந்தி பேசும் இந்த மாநிலங்களில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி இருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.