செய்திகள்

களக்காட்டில் முதியவர் மாயம்

களக்காட்டில் முதியவர் மாயமானது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் முதியவரை தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

களக்காடு:

களக்காடு ஆவுடைவிலாசம் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது72). இவரது மனைவி வசந்தா. இவர்கள் மகன் முத்துராஜுடன் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 25-ந் தேதி பழனி ஆற்றுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பழனி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது மகன் முத்துராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான பழனியை தேடி வருகின்றனர்.