முதியவர் பிணம் 
செய்திகள்

கரூரில் ரெயில் தண்டவாளத்தில் முதியவர் பிணம்

கரூரில் ரெயில் தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

மாலை மலர்

கரூர்:

கரூர் மூர்த்திபாளையம் ரெயில் நிலையத்திற்கு இடையே குளத்துப்பாளையம் பகுதி தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

முதியவர் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் அந்த முதியர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.