செய்திகள்

மோகனூர் அருகே அக்காள் திட்டியதால் தங்கை தற்கொலை

மோகனூர் அருகே அக்காள் திட்டியதால் தங்கை குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரமத்திவேலூர்:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அணைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவருக்கு கோகிலா (வயது 20), தீபிகா (வயது 16) என 2 மகள்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் மோகனூர் அருகே உள்ள என்.புதுப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மேகலா வேலை பார்த்துக்கொண்டிருந்த போது சூப்பர்வைசர் திட்டியதாக தெரிகிறது.

இது குறித்து மேகலா தங்கை தீபிகாவிடம் கூறியுள்ளார். இதனால் அவர் சீனியர் சூப்பர்வைசரிடம் (எஸ்.ஓ.) புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர் மேகலாவிடம் இதை ஏன் தீபிகாவிடம் கூறினாய்? என்று கேட்டுள்ளார். இதில் எஸ்.ஓ.வுக்கும் மேகலாவும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபம் அடைந்த மேகலா தீபிகாவை திட்டியுள்ளார். அதனால் மனமுடைந்த அவர் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்வத்தை பார்த்த மற்ற பெண்கள் மற்றும் மில் தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் தீபிகாவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT