செய்திகள்

தினகரன் உள்ளிட்ட சுயேட்சைகளுக்கு குலுக்கல் முறையிலே சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் அதிகாரி

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் மற்றும் சுயேட்சைகளுக்கு குலுக்கல் முறையிலே சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி கூறியுள்ளார்.

சென்னை:

ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. 131 பேர் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதற்கான பரிசீலனை இன்று நடந்தது. திமுக வேட்பாளர் மருது கணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தினகரன் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டன.

நடிகர் விஷால் மனுவில் உறுதிமொழி மற்றும் சொத்து விபரங்கள் ஒழுங்காக தாக்கல் செய்யப்படவில்லை எனவும், அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். இதனால், அவரது மனுவை பரிசீலனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொப்பி சின்னம் தினகரன் கேட்டுள்ள நிலையில், தொப்பி சின்னத்தை ஏதேனும் அரசியல் கட்சிகள் பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும், தினகரன் உள்ளிட்ட அனைத்து சுயேட்சைகளுக்கும் குலுக்கல் முறையிலேயே சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி கூறியுள்ளார்.

இறுதி வேட்பாளர் பட்டியலில் 63 பேருக்கு மேல் இடம் பெறும் பட்சத்தில், யாருக்கு வாக்களித்தோம் என்ற இயந்திரம் பயன்படுத்த முடியாது என்றும் அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT