செய்திகள்

ம.பி: சாலை வளைவில் திரும்பிய மண் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 8 தொழிலாளர்கள் பலி

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 16 தொழிலாளர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி வளைவில் திரும்பும் போது கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை மலர்

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் அலிராஜ்புர் மாவட்டத்தில் அலாவா என்ற பகுதி அருகே உள்ள கிராமம் ஒன்றில் இன்று 16 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மண் லாரி சென்று கொண்டிருந்தது. சாலை வளைவில் திரும்பும் போது திடீரென லாரி தலைகீழாக கவிழ்ந்தது.

லாரி கவிழ்ந்ததும் கீழே விழுந்த தொழிலாளர்கள் மீது மண் கொட்டியதால் பலர் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.