சாலை விபத்து 
செய்திகள்

உ.பி.யில் டெம்போ வேன் - லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் டெம்போ வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள திபியாபுர்-பேலா சாலையில் ஒரு டெம்போ வேன் இன்று காலை 6.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அதில் 10க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

முன்னால் சென்ற மற்றொரு வேனை டெம்போ வேன் முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த லாரியுடன் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் டெம்போ வேனில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT