முதல் பாதி நேரத்தின்போது முகமது சாலா பந்தை கோல்நோக்கி எடுத்துச் சென்றார். அப்போது ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனும், பின்கள வீரருமான செர்ஜியோ ரமோஸ் சாலாவை தள்ளிக் கொண்டே பந்தை பறிக்க முயன்றார். ஒரு கட்டத்தில் செர்ஜியோ ரமோஸ் சாலாவின் கையை வசமாக தன் கைக்குள் பிடித்துக் கொண்டு பலமாக தள்ளினார்.
இதனால் சாலா தரையில் விழுந்தார். அப்போது இடது கை தோள்பட்டை தரையில் பலமாக தாக்கியது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக வலி தாங்க முடியாமல் சாலா வெளியேறினார். இதற்காக செர்ஜியோ ரமோஸிற்கு எந்தவித தண்டனையும் (மஞ்சள் அட்டை இல்லை சிகப்பு அட்டை) கொடுக்கப்படவில்லை. இது லிவர்பூல் அணி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சாலாவின் சொந்த நாடான எகிப்தின் அனைத்து ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.