செய்திகள்

எகிப்து: கார்குண்டு தாக்குதல் நிகழ்த்திய 31 பேருக்கு மரண தண்டனை - நீதிமன்றம் அதிரடி

எகிப்து நாட்டில் கார் குண்டு வெடிப்பு மூலம் அரசு வழக்கறிஞரை கொலை செய்த குற்றத்திற்காக 31 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

எகிப்து நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு மூத்த அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்த ஹிஷாம் பராகத் என்பவரின் கார் மீது வெடிகுண்டுகள் நிறைந்த காரை மோதி வெடிக்கவிட்டு அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மற்றும் ஹமாஸ் தீவிரவாத குழுவைச் சார்ந்த பல பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தாக்குதலில் தொடர்புடைய 31 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இவர்களுக்கான தண்டனை அடுத்த மாதம் 22-ம் தேதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT