செய்திகள்

எழும்பூர் லாட்ஜில் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை

எழும்பூர் லாட்ஜில் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை செனாய் நகர் வெங்கடசலபதி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல். இவரது மனைவி உமா.

இவர்கள் எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர். இந்த நிலையில் அவர்கள் இருந்த அறை கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் எழும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து அறை கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது கிருஷ்ணவேல், உமா ஆகியோர் பிணமாக கிடந்தனர். அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் கடன் தொல்லையால் கிருஷ்ணவேல், உமா தற்கொலை செய்தது தெரிந்தது.